$

Tuesday, September 05, 2006

வேட்டையாடு விளையாடு

நான் மிகவும் ரசித்தவைகள்

1.முதல் பாதி வேகம் - (அந்த முதல் சண்டைக்காட்சியினை தவிர) மிக லாவகமாக கையாளப்பட்ட காட்சிகள், சுவாரசியம் குறையாத கதையின் போக்கு.

2. கமாலினி - பாடலும் வசனங்களும் அந்த 10 நிமிட பிளாஷ்பேக்கும். - அழகிய கவிதை.

3. ஜோதிகாவின் கதாபாத்திரத்தை மிக சீரியசாக அறிமுகப்படுத்த அவரது மேசையில் "ஒரு மாலையும், இன்னொரு மாலையும்" புத்தகம், "house of sand and fog" பற்றிய பேச்சு, "நான் இப்போல்லாம் ரொம்ப அழுமூஞ்சி ஆகிட்டேன்" என்ற மிகச் சிறிய வசனம்.

4.R.D.ராஜசேகர் கேமரா இல்லையே என்ற லேசான ஏக்கம் எனக்கு படும் தொடங்கி சற்று நேரம் வரை இருக்கத்தான் செய்தது. (காக்க காக்க, கஜினி இரண்டிலுமே என் முதல் ஒட்டு RDR க்குதான்) . ஆனால் ரவிவர்மனின் ராஜாங்கத்தை பெரிய திரையில் பார்த்து பிரமித்து இரண்டாம் முறை காமிரா நுணுக்கங்களை காணவே செல்லவிருக்கிறேன்.

5.எங்கும் சுவாரசியம் குறையாத படத்தொகுப்பு - (ஆண்டனி) .

6. தாமரை - மிக அழகான உரைநடை கவிதைகளை பாடல்களில் புகுத்தியிருப்பதால். ("என் பதாகை தாங்கிய உன் முகம் என்றும் மறையாதே")

குறைபாடுகளாய் எனக்கு பட்டவை

1. என்னதான் 35+ வயதுள்ள போலீஸ் தொப்பையுடன் இருப்பார் என்ற "அடிப்படை" உண்மை உணர்ந்திருந்தாலும் கமலை அவ்வாறு பார்க்க மனது வரவேயில்லை. சண்டைக்காட்சிகளில் அவர் திணறுகிறாரா? இல்லை அவ்வாறாக அவை அமைக்கப்பட்டுள்ளனவா? என்று தெரியவில்லை. மேலும் "மாட்டுவடா", "யார்கிட்ட..?" என்பது போன்ற விஜய்-அஜித் ரக வசனங்கள் அவ்வளவாக சிறக்கவில்லை.

2. பாதிபடம் போன பிறகு இடைவேளைக்கு சற்று முன்பே அறிமுகமாகும் வில்லன்களின் அறிமுகம் கதையின் வேகத்தை திடீரென்று குறைக்கதான் செய்கிறது. மாறாக அந்த கதாபாத்திரங்களின் details சற்று விபரமாக விசாரணை காட்சிகளில் காட்டப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறது.

3. பாடல்கள் மிக அழ்காக compose செய்யப்பட்டிருந்தாலும் பின்னணி இசை அளவுக்கு அதிகமான இரைச்சலுடன் இருக்கிறது சில காட்சிகளில். (கஜினியிலும் இந்த குறை இருந்தது)

4. மிக வேகமாக காட்சிகள் சென்றிருக்க வேண்டிய இரண்டாவது பாதியில் பாடல்களின் இணைப்பு பெரும் பிசகாகிவிட்டது. இனிமையான "உயிரிலே.." பாடல் சுத்தமாக ரசிக்கமுடியாத situation ல் வருவதால் எரிச்சலே மிஞ்சுகிறது.

ஆயினும் ஒரு நல்ல crime thriller நெடுநாட்களுக்கு நல்ல முறையில் வந்திருப்பது எனக்கு மிக மகிழ்வே!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ??????????.??????????...??????-??---    
????????????????????????, ????????????????????????????????

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal