$

Monday, July 31, 2006

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

மொழி : தமிழ்
நடிகர்கள் : பரத்,மல்லிகா கபூர், அருண்குமார்,தீபு,பாஸ்கர்,ரேணுகா.
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் : விஜய் மில்டன்
Special Effects : EFX , Media Artists




"கொலுசுகள் பேசக்கூடும்" என்ற மிக பிரசித்தி பெற்ற (உரைநடை) கவிதை புத்தகத்தின் ஆசிரியர் என்ற முறையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் "விஜய் மில்டன்" -ன் விசிறி நான். அவரது முதல் திரைப்படம் காண வெகு நாள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

கதை

தன்னை காதலிக்காத காதலியை அவள் காதலிக்கும் காதலனுடன் சேர்த்து வைக்கும் அந்த கால ஹீரோ கதை என்று ஒற்றை வாக்கியத்தில் சொல்லி விட முடியாதபடி மிக நேர்த்தியான காட்சிகளையும், சம்பவங்களையும் கோர்த்து கத்தி ரத்த சத்த பயமில்லாமல் அழகான திரைப்படமாக செதுக்கியிருக்கிறார்.

தன் காதலியை தேடி சென்னை வரும் மனோ (பரத்) விற்கு தோழியாகிறாள் ஜோ (மல்லிகா). ஜோவின் காதலனான "ப்ரேம்" (அருண்) தான் மனோவின் காதலி "நந்தினி"(தீபு)யின் மனம் கவர்ந்தவன் என்று அறிந்து இருவரையும் பிரிக்க திட்டமிடுகிறார்கள்.

அவர்களின் திட்டங்கள் எல்லாம் பொய்த்துப்போவது மட்டுமல்லாமல் ப்ரேமுக்கும், நந்தினிக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் வரை செல்கிறது. மனமுடைந்து போகும் மனோவிற்கும், ஜோவுக்கும் இன்ப அதிர்ச்சியாக, அவர்களே எதிர்பாராத வண்ணம் ப்ரேமும் நந்தினியும் அவர்களின் ego போட்டியில் சண்டையிட்டு பிரிந்துவிடுகிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜோவை ப்ரேமுடன் சேர்த்து வைக்கும் முயற்சிகளை துவக்குகிறான் மனோ.

ப்ரேம் அலுவலகத்தில் வேலைக்காக அணுகும்போது, ஜோ, மனோ ஜோடியினால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பாஸ்கர் மனோவை சந்தேகப்பட, அவரிடம் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறான் மனோ.

தான் தேடி வந்த காதலி நந்தினி அல்ல எனவும், ஜோவே மனோவின் காதலி என்றும் சொல்கிறான். பிறகு மனோவின் காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

சிறப்பம்சங்கள்

1. மல்லிகா கபூர் - நிச்சயமாக படத்தின் தலைப்புக்கேற்ற ஹீரோயின் என்பது மிகவும் மகிழ்வான செய்தி. தனது பாத்திரத்தை ( glycerine காட்சிகள் ஒன்றிரண்டு தவிர) மிக நிறைவாக செய்திருக்கிறார். அவருக்கு குரல் கொடுத்திருக்கும் சவீதாவுக்கும் அவரது குரலை சிறப்பாக்கிய பெருமை உண்டு.

2. யுவன் - இந்த திரைப்படம் மட்டுமில்லாமல் இந்த வருட துவக்கத்திலிருந்தே பல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் யுவன். நல்ல பாடல்கள் சில இருக்கின்றன. உருத்தாத பின்னணி இசையும் நிறைவே.

3. Special Effects - படத்தின் இடை இடையே சிறிய சிறிய அனிமேஷன் காட்சிகளை உலவ விட வேண்டும் என்று யோசித்த இயக்குனருக்கு முதலில் ஒரு சபாஷ். ஆனால் அஞ்சல் அலுவலகத்தில் தபால் பிரிப்பதற்கெல்லாம் அனிமேஷன் காட்சிகளை இணைத்திருப்பது
நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை

1. அளவுக்கு மீறியதால் படத்திற்கு பலமாக இருந்திருக்க வேண்டிய அனிமேஷம் காட்சிகள் அலுத்துப்போகும் அளவிற்கு இருக்கின்றன.

2. ரேணுகா கதாபாத்திரம் மிகவும் முற்போக்கான கதாபாத்திரம் என்கிற ரீதியில் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் sorry, கொஞ்சம் ஓவர்.

3. க்ளைமாக்ஸ்.


சில குறைகள் இருந்தாலும் நிச்சயமாக இந்த வருடத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. பொருளாதார ரீதியில் படம் தோல்வியாக இருந்தாலும் நல்ல படம் என்ற முத்திரை இருப்பதால் கண்டிப்பாக அடுத்த படத்தில்
விஜய் மில்டன் ஜெயிப்பார் என வாழ்த்துவோம்


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ??????????.??????????...??????-??---    
????????????????????????, ????????????????????????????????

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal