$
Memoirs of a geisha
(Geisha - A Japanese woman trained to entertain men with conversation and singing and dancingமுதலில் geisha என்ற சொல்லை தமிழில் எப்படி மொழிபெயர்ப்பது என்ற பெரும்
குழப்பம் எனக்குள் வந்தது. "ஆடல் மகளிர்" என்றுதான் நான் புரிந்து கொண்டேன்.
ஏனெனில் இவர்கள் விபசாரம் என்ற எல்லைக்குள் வருவதில்லை. ஆகவே
அவர்களை குறிக்கும் வார்த்தையை நான் உபயோகிக்கவில்லை.
வேறு உகந்த வார்த்தைகள் இருப்பின் அறியத் தறுமாறு வேண்டுகிறேன்.)
ஒரு சிண்ட்ரெல்லா கதை போலதான் தோன்றியது DVD யின் மேலட்டை விமர்சனத்தை
படித்தபோது. பொழுது போக்க வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தினை
பார்க்க முனைந்தேன். ஆனால் முற்றிலும் நிறைவான அனுபவத்தை அளித்தது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தின் பெயரையே தலைப்பாக கொண்ட "ஆர்த்தர் கோல்டனின்" நாவலே இதற்கு
மூலம். ஒரு கடற்கரையோர கிராமத்தின் மழைக்கால மாலைப்பொழுதில் ஆரம்பிக்கிறது திரைப்படம். வறுமையில் வாடும் மீனவ குடும்பத்தின் தந்தை தனது மகள்களை நகரத்தில் உள்ள geisha இல்லத்திற்கு விற்கிறார். அவர்களில் இளையவளான "சியோ சேன்" தனது விபரம் புரியாத 9 வயதில் தனது சகோதரியின்றும் பிரிக்கப்பட்டு இனம் புரியாத அனுபவங்களை வாழ்வில் சந்திக்கிறாள்.
அங்கிருந்து தப்பிக்க முயன்று இல்லத்தின் மூத்த பெண்மணியின் வெறுப்பைப் பெறுகிறாள்.
அவளை அடிமை போல உழ்ல வைக்கின்றனர் அந்த geisha இல்லத்தில் அனைவருமே.
வாழ்வே மிகவும் துயரமானது என்ற எண்ணத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நாளில் "சேர்மேன்" என்று அனைவராலும் அழைக்கப்பெறும் அன்பான உள்ளம் கொண்ட மனிதரை சந்திக்கிறாள். "வாழ்வில் துயரம் என்பது தற்காலிகமானது, மகிழ்வு ஒரு நாளில் அனைவரையும் தழுவிக்கொள்ளும். சற்று தொலைவில்நின்று கொண்டிருக்கும் ஒரு geisha வை சுட்டிக்காட்டி அவளும் துன்பங்களால் ஒரு காலத்தில் அவதிப்பட்டிருக்கிறாள் என்றும்
தற்போது அவளின் மகிழ்வான முகத்தை பார்" என்றும் மிக உற்சாகமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப்போகிறார்.
சில நிமிடங்களே ஆயினும் அந்த அனுபவம் அவள் வாழ்வையே புரட்டிப்போடுகிறது.
சேர்மேன் அவளது இரவு உணவுக்கென கொடுத்த உணவை கோவிலில் காணிக்கையாக்கி என்றேனும் ஒரு நாள் தான் ஒரு geisha ஆக வேண்டும் என்றும், தான் மகிழ்வாக இருக்கும் இன்னொரு தருணத்தில் சேர்மேனை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறாள். நம்பிக்கையோடு வாழும் அவளுக்கு பலனும் கிடைக்கிறது.
அவள் எவ்வாறு ஒரு சிறந்த geisha வாக mould செய்யப்படுகிறாள், அவள் எத்தகைய கணத்தில் சேர்மேனை சந்திக்க நேரிடிகிறது என்பதையெல்லாம் என்பதனை ஒரு கவிதை போன்று சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட , சிறந்த இசைக்கோர்வு செய்யப்பட்டகாட்சிகள் மூலமாக மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
மூன்று ஆஸ்கார் விருதுகளை பெற்றிருக்கிறது. Best cinematography,Best costume design,Best Art Direction ஆகிய மூன்று பிரிவுகள்.சிறந்த இசைக்கோர்ப்பிற்கும் விருது அளித்திருக்கலாமோ என்ற எண்ணம் இருக்கிறது. மிக சிறந்த அனுபவத்தை அளித்த திரைப்படம். கட்டாயம் உலக சினிமா ரசிகர்கள் ஒரு முறை பார்க்க வேண்டியதும் கூட.
சுட்டிகள்
ஆஸ்கர் விருது பட்டியல்
imdb சுட்டி apple trailer
My date with the president's daughter
மிகுந்த மனசோர்வு தரும் நாட்களில் ஐகாரஸ்பிரகாஷ் போலவே நானும் நகைச்சுவை திரைப்படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அவ்விதம் நேற்று பார்த்த திரைப்படம் My date with the president's daughter. லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் மனம் விட்டு சிரித்தால் 100% மகிழ்ச்சி நிச்சயம்.
"டக்ளஸ்" என்கிற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த , நண்பர்களால் அடிக்கடி கேலி செய்யப்படுகிற "dating" ற்காக ஒரு நல்ல பெண் தேடிக்கொண்டிருக்கிற வாலிபன். சம்பிரதாய முதற்குடிமகனுக்கான அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகள் தாண்டி வெளியில் வர நினைக்கிற அமெரிக்க அதிபரின் மகள் "ஹேலி". இவர்கள் விபத்தாக ஒரு கணத்தில் சந்தித்து தங்களின் date ஆசையை பூர்த்தி செய்ய முடிவு செய்கின்றனர். வழக்கமான ஆரம்பகட்ட தயக்கங்களுக்கு பிறகு தக்க பாதுகாப்புடன் தனது மகளை அனுப்பி வைக்கிறார் அமெரிக்க அதிபர்.
ஆனால் கூடவே வந்து தொல்லை கொடுக்கும் பாதுகாவலர்களின் பிடியிலிருந்து
தப்பி ஓடி பல்வேறு சிக்கல்களை சந்தித்து எப்படி தங்களது முதல் dating
அனுபவத்தை வெற்றிகரமாக்குகின்றனர் என்பதை மிகவும் நகைச்சுவையாக
90 நிமிட திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.
"டக்ளஸ்ஸின் தங்கையாக வரும் அந்த சிறுமி அவ்வப்போது உதிர்த்து விட்டுப்போகும்
நகைச்சுவை வசனங்கள், ஹேலியும், டக்ளஸ்ஸும் தப்பியோடும் chasing காட்சிகள்,
சிறிய சிறிய உத்திகளாலேயே ஹேலியைக் டக்ளஸ் கவரும் இடங்கள் என
நிறைய நகைச்சுவை அம்சங்களைக் கொண்ட திரைப்படமாக இருந்தது.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள். imdb linkamazon link
ஓடு!
அது ஒரு ஆப்பிரிக்க காடு
தினமும் காலையில்
அங்கு ஒரு மான் கண் விழிக்கிறது
அது அந்த காட்டிலேயே மிக
வேகமாக ஓடும் சிங்கத்தை விட மிக
வேகமாக ஓட வேண்டும்
இல்லையெனில் அந்த நாளின் முடிவு
சாவுதான் என்பதை அந்த மான்
உணர்ந்திருந்தது.
அதே காட்டில் தினமும்
ஒரு சிங்கமும் கண் விழிக்கிறது
அது தன்னை விட வேகமாக
ஓட முயற்சிக்கும் மானின்
வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வண்ணம்
ஓட வேண்டும்
இல்லையெனில் அந்த நாளின் முடிவு
பட்டினிதான் என்பதை அந்த
சிங்கமும் உணர்ந்திருந்தது
நீங்கள் மானாக இருக்கிறீர்களா?
அல்லது சிங்கமாக இருக்கிறீர்களா
என்பது முக்கியமில்லை
ஆனால் காலையில் எழுந்தவுடன்
ஓடத்துவங்க வேண்டும்
அதுதான் முக்கியம்
- சமீபத்தில் படித்து மிகவும் ரசித்தது....
சுயங்களின் வலி
வெளிச் சொல்லமுடியாத வெக்கைகளின் வெளிகளில் பற்றியெறிகின்றன என் பச்சை தாவரங்கள்சுயங்களின் முனை முறிவுகளில் தடவப்பட்ட பிரியக்களிம்புகள் என்றென்றும் ஆற்றுவதில்லை புரையோடிப்போன மனக்காயங்களைஇருள் நிறைந்த பாதைபோல ஒளியற்றுப்போகிறது வாழ்க்கை சில நேரங்களில் ஆங்கே ஒட்ட வைத்த மெழுகு போல உன் பிரியங்கள் அவ்வப்போது என்னை ஆற்றுமாயினும் வழியற்றுத் திரிகின்றன என் விழிப் பட்டாம்பூச்சிகள்காலங்களின் வழிதெரியா ஒற்றையடிப்பாதையின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது என் பிரியங்களின் ஆழ்நதிஎன்றேனும் ஒருநாள் கரையேருமென்ற நம்பிக்கையில் நானும் என் பிரியங்களும் உன் பின்னாலேயெ நடைபயில்கிறோம்.
வெறுமை ஈனும் இரவுகள்
எப்போதும் எதிர்படுவதேயில்லைஇனிமைகளை உள்ளங்கையில்வைத்து தாங்கும்ஏக்கங்களற்ற இரவுப்பொழுதுகள்
பெரும் கூட்டமாய் நட்சத்திரங்களுக்கீடாய்
காய்த்திருக்கின்றன
கவலைகளை ஈனும்
வெறுமைச் செடிகள்
என்னுள்ளே
தூக்கத்தினை இடவலமாய் பந்தாடும்
அரும்பெரும் கலையினை
கைவரக் கற்று வந்திருக்கின்றன
எனக்கான இரவுகள்
அவை ஒருபோதும்
என்னை ஒருமித்த
மனநிலையில்
வைத்திருப்பதில்லை
ஒட்டுமொத்த இரவும்
ஒருமித்த அமைதியில்
நிலைத்திருக்க
மோனத்தின் மறுபக்கத்தினை
நுகர்ந்தவாறு விழித்திருக்கிறே
என்றாகிலும் ஒருநாள்
தூக்கம் கொடுக்கும்தேவதைகள்
என்கதவு தட்டும் ஒசையில்
வெடித்துப்பறக்கும் என்
வேதனையின்சிறகுகளை
எண்ணியவாறே!
யாரேனும் சொல்வீராஅதன்
முகவரிகள் என்றகேள்வியில்
கரைகின்றன மீத இரவுகளும்.
Banlieue 13 -French ( B13 District)
மிகச் சிறிய கதைக்களன், குறைந்த ஆனால் வலுவான கதாபாத்திரங்கள் மிக வேகமான கேமரா இயக்கங்களென நிறைய ஆச்சர்யங்களை உள்ளடக்கி காத்திருந்தது இந்த French திரைப்படம். அதிவேகமான பயணம் போல நகர்கிறது திரை. 80 நிமிடத்தில் மிக அருமையான ஒரு ஆக்ஷன் திரில்லர்.
டேமியன் என்ற காவல் துறை இளைஞனும், லெய்டோ என்ற சிறைக்கைதியும் இணைத்து சொல்லப்படுகிறது கதை. இரண்டு இளைஞர்களின் தனித் திறமைகளை அறிமுகக்காட்சிகளில் மிக அநாயசமான துரத்தல் மற்றும் சண்டைக்காட்சிகளில் படம் பிடித்துக்காட்டுவது அழகு.
அதே நேரத்தில், ஒரு மிகப்பெரிய அளவில் மக்களிடையே சேதம் விளைவிக்ககூடிய நைட்ரஜென் அணுகுண்டு ஒன்றினை கண்டுபிடித்து செயல் இழக்க வைக்கும் மிகப்பெரிய பொறுப்பு டேமியனை தேடி வருகிறது. அந்த நைட்ரஜென் குண்டில் பொருத்தப்பட்ட லொகேடரின் வாயிலாக அது B13 மாவட்டத்தின் உள்ள தாகா என்ற சிறுகும்பல் தலைவனின் பிடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகிறது.
B13 மாவட்டத்தில் பிறந்து அந்த நகரின் வரைபடத்தினை, ஒவ்வொரு மூலை முடுக்குகளை அறிந்தவன் என்ற முறையில் லெய்டோவினை டேமியன் துணையாக அனுப்பவும் காவல் துறை முடிவெடுக்கிறது.சிறிய குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் லெய்டோவின் லட்சியம் தன் தங்கையை கடத்தி வைத்திருக்கும் தாகாவிடமிருந்து மீட்பதே.
இவ்விதமாக இரன்டு கதாபாத்திரங்களுக்கிடயே அறிமுகம் ஏற்படலும், அதை தொடர்ந்து உருவாகும் சிக்கல்களின் கோர்வையும்,சிறந்த சேசிங் காட்சிகளும் பிறகு வழக்கம்பொல எல்லாம் நன்மையில் முடிவுற சுபமும்.
திரைப்படத்தின் மிக சிறந்த பகுதியாக சேசிங் காட்சிகளையும், கேமரா நுட்பங்களையுமே குறிப்பிட வேண்டும். அதிவேகமாக நகரும் திரைக்கதையும் படத்திற்கு பெரிய பலம்.
ஆக்ஷன் பிரியர்களுக்கு நல்லதொரு திரை விருந்து.
திரைப்படம் பற்றிய விபரங்கள்:
Banlieue 13 ( B13 District) இயக்குனர் : பியர் மோரல்
ஒரு இல்லமும் சில இன்னல்களும்
எப்போதும் மிதந்து சென்று கொண்டே இருக்கின்றனஎனக்காக நகரின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கின்ற அறையின் சுவடுகள் யாவும்
ஒவ்வொரு தேடலும், தோல்வியும்உரைத்துக்கொண்டே இருக்கின்றனபுதிய மனிதர்களையும் தோற்றங்களையும்
ஒரு போதும் வாய்ப்பதேயில்லை
மனதிற்க்கியந்த வாடகை இல்லம்
ஒருபோதும்
ஒரு நோய்கொண்ட நாளின்
படுக்கைஅறை போல
பெரும் சலிப்பை அளிக்கின்றன
தேடுதல்களின் நீட்சி.
தேடலின் வலிமைகள் குறைந்து போன
ஒரு தேய்பிறை நாளில் வருகின்றன
அகன்ற அறைகளும் மரங்களடர்ந்த சூழலும்
நீரலைகளை காற்றில்
தடவித் தரும் கிணற்றடியும்
கொண்டசொந்த வீட்டின்
நினைவுகள்
கரைந்து போன மழை நாளின்
சுவடுகள் போல
வீடு குறித்த பழைய நினைவுகள் கடந்து போக
மீண்டும் தொடர்கின்றன
தேடுதல் குறித்த கவலைகள்.
முதற்புள்ளி
வணக்கம்தமிழ் இணையத்தில் வலைப்பூக்களில் இணைவதில் மகிழ்கிறேன். திறம்பட எழுதும் திறன் வாய்ந்தவன் இல்லை எனினும் பெரும் தமிழ் அன்பர்களின் இணைவு என்னை இசைபட வழி நடத்தும் என்ற எண்ணத்தில் உங்களில் ஒருவனாய் இணைகிறேன். வாழ்த்துங்கள் வளர்கிறேன்.நன்றி
