சென்னை காதல்

ஒரு வார விடுமுறை நாள் மோசமாக முடிய என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்.
1. காலநிலை நன்றாக அமையாமல் போகலாம்.
2. பக்கத்து போர்ஷனில் தொலைக்காட்சி சத்தம் உங்கள் ஆழ்ந்த தூக்கத்தை கலைக்கலாம்.
3. ஒரு நல்ல சினிமா பார்க்கலாமே என்று முடிவெடுத்து சென்று மிக மோசமான திரைப்படத்தை பார்க்க நேரலாம்.
இந்த மூன்று விஷயங்களுமே மிக சரியாக வாய்த்தது எனக்கு. அதிலும் மிகவும் அதிக பாதிப்பை அளித்தது மூன்றாவது விஷயம்தான்.
"சென்னை காதல்" என்ற நல்ல star cast உள்ள , நல்ல தயாரிப்பாளர் தயாரித்த, வெகு நாட்களுக்கு பிறகு விக்ரமன் படம் என்றெல்லாம் எண்ணி விமர்சனம் அறியாமலேயே
போனதற்கு மிக சிறந்த தண்டனை காத்திருந்தது.
போனதற்கு மிக சிறந்த தண்டனை காத்திருந்தது.
Negative:
* ஆக்ஷன் படம் என்றால் கயிறு கட்டி கதாநாயகன் சண்டைக்கலைஞர்களுடன் சண்டை ோடுவதை jimmy zip ல் படம் பிடிப்பது மட்டும்தான் என்று யாரோ மிக தவறாக விக்ரமனுக்கு சொல்லியிருக்கிறார்கள். சகிக்கவில்லை.
* கதையே இல்லை. மோசமான திரைக்கதை. சற்றும் லாஜிக்கே இல்லாத காட்சிகள்
* ஆரம்பத்திலிருந்து இறுதி வரை எல்லா காட்சிகளையுமே யூகிக்க முடிவதாய் அமைத்திருப்பது.
Positive
(அப்படியெல்லம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் ஆறுதலுக்காகவாவது....)
* ரோபோ சங்கர் என்ற (விஜய் டிவி - கலக்க போவது யாரு - வெற்றியாளர்) மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மட்டுமே ஒரே ஒரு
சிறிய ஆறுதல்.
* சில பாடல்களில் இசையமைப்பாளர் - ஜோஷ்வா ஸ்ரீதர்.
இது கலைப்படமும் அல்ல, கொலைப்படமும் அல்ல, மசாலா படமும் அல்ல. இந்த விதம் என்று வகைப்படுத்த இயலாமலேயே போவதை வேண்டுமானால் சிறப்பம்சமாக சொல்லலாம்.
சென்ற வருடம் இதே போலவே பாசிலையும், இளையாராஜா பாடல்களையும் நம்பி "ஒரு நாள் ஒரு கனவு" திரைப்படத்திற்கு போன ஞாபகம் ஏனோ வந்தது. ஒரு நல்ல மாலைப்பொழுது வீணாய்ப்போனது.


1 Comments:
could have briefed the story also.
ச்Post a Comment
Links to this post:
Create a Link
<< Home