$

Wednesday, August 02, 2006

CRASH

மொழி : ஆங்கிலம்
வெளியான வருடம் : 2005
நடிகர்கள் : brenden fracer, sandra bullock,thandie newton,matt dillon,Don chedle மற்றும் பலர்.
இயக்கம் : Paul Haggis




CRASH என்ற பெயரைக் கேட்டதும் ஏதோ பெரிய விபத்தினை ஒட்டிய கதை என்றுதான் நினைக்க தோன்றியது. இந்த திரைப்படத்திலும் விபத்துகள் உண்டு. ஆரம்பத்திலும், இறுதியிலும் இரண்டு சிறிய விபத்துகள் படத்தினூடே ஒரு பெரிய விபத்து என காட்சிகள் இருந்தாலும் அவை எல்லாம் படத்தின் கதைக்கு உதவும் சம்பவங்களேயன்றி படத்தின் கருவை விளக்கும் அம்சங்களாக கையாளப்படவில்லை.

ஆரவாரமில்லாத, சற்றே சிக்கலான, நிறைய கதாபாத்திரங்களைக் கொண்ட ஆனால் மிக அழுத்தமான திரைக்கதையின் வாயிலாக படைத்திருக்கிறார் இயக்குனர் பீட்டர் ஹாகிஸ்.
முன், பின் தெரியாத 12 கதாபாத்திரங்கள். அவர்களின் தீவிர அடிப்படை சித்தாந்தங்கள், ஆசைகள்,கோபம், வெறுப்பு, சந்தோஷம் என 36 மணி நேரங்கள் அவர்களின் வாழ்வில் எவ்வளவு குழப்பங்கள் நிகழ்ந்து தெளிகின்றன என்பதை விளக்கும் திரைக்கதை.

திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள்:

-இரண்டு காவல்துறை துப்பறியும் அதிகாரிகள் cum காதலர்கள் - கிரஹாம் மற்றும் ரியா
-ஒரு மாவட்ட அட்டர்னியும் (DA) அவரது மனைவியும் - ரிக் மற்றும் ஜீன்
-இரண்டு கறுப்பின திருடர்கள் - பீட்டர் மற்றும் ஆன்டனி
-இரண்டு காவலாளிகள் - ரேயான் மற்றும் தாமஸ்
-ஒரு தொலைக்காட்சி நிறுவன இயக்குனரும் அவரது மனைவியும் - (ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதி) - கேமரூன் மற்றும் கிரிஸ்டினி
-ஒரு பூட்டு சரிசெய்யும் கொரிய பிரதிநிதி மற்றும் அவரது குடும்பம்- டேனியல்
-ஒரு பெர்சிய கடை உரிமையாளர் அவரது குடும்பம் - பர்ஹத்

இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என்று புரியவே 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இவர்கள் அனைவருக்கும் தனி தனியாக கவலைகள், பயங்கள்,இலக்குகள் என அவரவரவர்க்கு இருக்கும் தனிப்பட்ட நிகழ்வுகள் போக இவர்கள் வெவ்வேறு சம்பவங்களின் வாயிலாக சந்திக்கும்போது நிகழும் குழப்பங்களும் தீர்வுகளும்தான் கதை.

ஒரு ஆரம்பம் , ஒரு முடிவு என்ற வழக்கமான அணுகுமுறையிலிருந்து விலகி அவர்களது தினசரி நடவடிக்கைகளைக் கொண்டேகாட்சிகள் விரிந்து செல்கின்றன.ஒவ்வொருவரின் குணாதிசயங்களும், செயல்பாடுகளும் சூழ்நிலை காரணங்களால் மாறுபடுவதை மிக மிக அருமையாக தேர்ந்த காட்சிகளின் வாயிலாக வெளிப்படுத்துகிறது திரைப்படம்.

கதை அல்லது சம்பவங்களின் கோர்வை:


>
கதை என்று சொல்லப்போனால் அது மிகவும் குழப்பமாகவே முடியும். ஏனெனில் வழக்கதுக்கு மாறாக இதனை நிறைய சம்பவங்களின் கோர்வையாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

* கிரஹாம் ஒரு துப்பறியும் அதிகாரி. குற்றவாளியாக திரியும் தனது இளைய சகோதரனால் போதைக்கு அடிமையாகிவிட்ட தனது அம்மாவை தேற்ற முடியாமல் தவிக்கும் ஒரு கதாபாத்திரம். தான் எவ்வளவுதான் அக்கறை எடுத்துக்கொண்டாலும் தனது இளைய மக்னையே எண்ணிக்கொண்டிருக்கும் அவரது தாயை எண்ணி பெரிதும் வருந்துகிறார். கிரஹாமின் உடனுறை அதிகாரி மற்றும் காதலியாய் ரியா.

* பீட்டர் மற்றும் ஆன்டனி என்கிற இரண்டு கறுப்பின திருடர்கள். கருப்பர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் போல வெள்ளையர்களால் நடத்தப்படுகிறார்கள் என்று குறைப்பட்டுக்கொண்டு தினமும் கார் திருடும் நவீன கொள்ளைக்காரர்கள். அறிமுகக் காட்சியில் அந்த மாவட்ட அட்டர்னியும் (DA) அவரது மனைவியும் செல்லும் காரை கொள்ளையடிக்கின்றனர்.

* பீட்டரின் திருட்டு வாதங்களை விரும்பாமலும் வெறுக்காமலும், அவனின் நட்பை உதறமுடியாமலும் அவனுடன் இணைந்து செயல்படுகிறான் ஆன்டனி. ஒரு முறை கார் திருடி செல்லும்போது போலிஸின் துரத்தலில் இருவரும் தனி தனியே செல்ல நேர்கிறது. சென்ற இடத்தில் பீட்டர் ஞானோதயம் பெறுகிறான். ஆன்டனி கொல்லப்படுகிறான்.

* கார் திருடு போன அதே நாளில் அவர்களது வீட்டின் பாதுகாப்பிற்கென கதவுகளின் சாவிகளை மாற்ற சொல்லி மாவட்ட அட்டர்னியான தனது கணவனுடன் சண்டை போடுகிறாள் ஜீன். அந்த வீட்டிற்கு பூட்டு பழுது பார்ப்பவனாக வருகிறான் டேனியல் என்னும் கொரிய நாட்டவன். ஜீன் பேச்சில் தென்படும் கருப்பர்களுக்கு எதிரான வாதங்களை சகித்துக்கொண்டு தனது வேலையை முடித்து விட்டு செல்கிறான்.

* பிறிதொரு நேரத்தில் ஒரு பெர்சிய கடையின் பூட்டுக்களை சரி செய்வது தொடர்பாக அந்த கடை முதலாளி பர்ஹத் உடன் சண்டை போட்டு திரும்புகிறான். அடுத்த நாளில் பர்ஹத்தின் கடை கொள்ளை போகிறது. அதற்கு காரணம் டேனியலே என்று எண்ணி அவனை கொல்வதற்காக துப்பாக்கியுடன் அவனது வீட்டிற்கு செல்கிறான். அங்கே அவனே அறியா வண்ணம் அவனது துப்பாக்கியின் குண்டு டேனியல் மகளின் மீது பாய அதிர்ச்சியில் உறைந்து போகிறான். அதிர்ஷ்டவசமாக அந்த பெண் பிழைத்துவிட நிம்மதி பெருமூச்சு விடுகிறான்.

* மாவட்ட அட்டர்னியின் மனைவியாக வரும் ஜீனுக்கும் கறுப்பர்கள்பால் லேசான வெறுப்பு தொனிக்க தனது நடவடிக்கைகளை வைத்திருக்கிறாள். தனது வீட்டு உதவியாளராக இருக்கும் பெண்ணீனை அவர் கறுப்பினம் சார்ந்தவர் என்ப்தாலேயே அவர் பால் வெறுப்பை உமிழ்கிறாள். ஆனால் கணவரின் பால் கொண்ட கறுத்து வேறுபாடுகள் முற்றிப்போன ஒரு நாளில் மாடிப்படியில் தவறி விழ நேரில துணையின்றி தவித்த நேரத்தில் வீட்டு உதவியாளினி கைகொடுக்க தனது கறுப்பின வேறுபாடுகளை மறக்கிறாள்.

* கேமரூன் மற்றும் கிரிஸ்டினி ஆகிய் இருவரும் ஒரு மகிழ்வான மாலை வேளையில் காரில் போய்க்கொண்டிருக்கும்போது ரேயான் மற்றும் தாமஸ் ஆகிய இரு காவல்துறை அதிகாரிகளலால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். தனது தந்தைக்கு மருத்துவ உதவிகளை திறம்பட வழங்கவில்லை என்ற கோபத்தில் ஒரு மருத்துவமனையின் கறுப்பின சிப்பந்தியை தொலைபேசியில் கடிந்து கொண்டு வருகிறான் ரேயான். அவனுடைய சொந்த வெறுப்பு இந்த கறுப்பின தம்பதிகளின் மீதும் பாய தேவையின்றி அவர்களை காரிலிருந்து இறக்கி கிரிஸ்டினியின்பால் சோதனை என்னும் பெயரில் தவறான உடற்சார் அத்துமீறலை மேற்கொள்கிறான். அவனை எதிர்க்க திராணியின்றி கேமரூன் புழுங்குகிறான். இந்த செய்கையை சற்றும் விரும்பாத தாமஸ் தனது ஒத்துழையாமையை வெளிப்படுத்துகிறான்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கேமரூன்-கிரிஸ்டினி இடையே இடைவெளி அரும்புகிறது. வீட்டிற்கு போக விருப்பமின்றி கண்போன போக்கில் வாகனத்தை செலுத்துகிறான். பிறகு வழியில் போலீஸிடமிருந்து தப்பித்து வரும் பீட்டருக்கு புகலிடம் கொடுத்து அவனை தப்பிக்க வைக்கிறான். போகிற போக்கில் யாரோ சில கறுப்பர்கள் செய்யும் தவறுக்கு மற்றவர்கள் படும் அவதியினைப்பற்றி பேச பீட்டர் மனம் மாறுகிறான்.

* மற்றொரு காவல் துறை அதிகாரியான தாமஸ் ரேயானிடமிருந்து தனது பொறுப்பை விடுவித்துக்கொண்டு தனியே சென்றுவிடுகிறான். வழியில் பீட்டரை பிரிந்து தனியே வரும் ஆன்டனிக்கு தனது காரில் lift கொடுக்கிறான். சற்று நேரம் பேசிக்கொண்டிருக்கும்போதெ அவ்னது செய்கைகளில் சந்தேகம் கொண்டு அவ்னை கொன்றுவிடுகிறான். இறந்த பிறகே அவன் குற்றமற்றவன் என்பதை அறிகிறான். மனசாட்சி உறுத்த ஆன் டனியை சாலை ஓரத்திலேயே கிடத்தி விட்டு கடந்து போகிறான்.

* அதே நேரத்தில் மற்றொரு சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில் கிரிஸ்டினியை தனது உயிரினையும் பொருட்படுத்தாது காப்பாற்றுகிறான் ரேயான்.




சிறப்பம்சங்கள்:

* இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் தொய்வடையாத திரைக்கதை, நேர்த்தியான காட்சி அமைப்பு, கதாபாத்திரங்களை இணைக்கும் லாவகம்

* சிறப்பான ஒளிப்பதிவு. லேசான பச்சையை (corporate color போலும்!) திரைப்படம் முழுமைக்கும் தூவிவைத்திருக்கின் றனர்.

எதிர்மறை(யாய் நான் கருதுவது)

* சாதாரண சினிமாவாய் இல்லாது ஒரு intellectual லாய் தோற்றம் கொண்டிருப்பது

விருதுகள்:

2005 - ஆஸ்கர்.

சிறந்த திரைப்படம் (பால் ஹேகிஸ் & பாபி)
சிறந்த திரைக்கதை (பால் ஹேகிஸ் & கேதி ஷூமேன்)
சிறந்த எடிட்டிங் (ஹியூக்ஸ் வின்போன்)

சுட்டிகள்:

2 Comments:

At 02 August, 2006, Blogger Boston Bala said...

பட அறிமுகம் நன்று.

என்னுடைய விமர்சனம்: E - T a m i l : ஈ - தமிழ் :: Crash - Movie Review

தொடர்பான இன்னொரு பார்வை: ** ‘இனப்பெருமை’ என்று எண்ணக்கூடிய இனவெறி - Karthik’s nothing but blogs

ச்  
At 05 August, 2006, Blogger சிவராமன் கணேசன் said...

நன்றி திரு பாலா அவர்களே. தொடர்ந்து வருக.

ச்  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ??????????.??????????...??????-??---    
????????????????????????, ????????????????????????????????

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal