கடல் பார்த்தல் அல்லது கவலை பார்த்தல்
கவலைகளில் கரைந்து போகும் என்
இரவுகளுக்கு தெரியும்
எத்தனை ஈரமானது
ஒரு துயர் நிறைந்த நாளென்று!
ஒரு நீண்ட பகற்பொழுதின் நீட்சியில்
கடலினில் மூழ்கப்போகும்
கதிரவனோடு என் துயரங்களைப்
பகிர்ந்து கொள்ள செல்வேன்!
அலைகளின் கால்களில்
கட்டிய சலங்கை இன்னொரு
பாதத்தடங்களை மெல்ல
நினைவுறுத்தி செல்லும்!
கூழாங்கற்கள் எல்லாமே
சற்றும் சிவப்பு,களைப்பு படராத
பளபளப்பான கண்களை
இடையுறுத்தி செல்லும்!
குழந்தையை அலையிலிருந்து
மீட்டெடுக்க எத்தனிக்கும்
ஏதோ ஒரு தாயின் கரங்கள்
தவறாமல் நினைவுக்கு
கொண்டு வரும்
வேறொரு தருணத்தில்
பிரியங்களை வாரியிறைத்த
வளைக்கரங்களை
நீலக்கடலின் அலைகளினூடே
கரைந்து போகுமெனெவே
எடுத்து சென்ற
துயரங்கள் யாவும்
இரட்டிப்பாக்கி வீடு
திரும்புவேன்!
இருட்டறையும் வரவேற்கும்
இன்னொரு கறுப்பு இரவில்
என்னை கரைத்துக்கொள்ள.



2 Comments:
"பிரியங்களை வாரியிறைத்த
ச்வளைக்கரங்களை"
அருமையான வரிகள்...
வளைக்கரங்களில் இருந்து பிரியங்களா? அட ஆச்சிரியமா இருக்கே.
கொடுத்து வைத்த ஆள் போல...
"இருட்டறையும் வரவேற்கும்
ச்இன்னொரு கறுப்பு இரவில்
என்னை கரைத்துக்கொள்ள."
அருமையான வரிகள்...நல்ல கவிதை....
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home