மாரீசம் யாதோ...?
பாடல் வரிகள் : வாலி
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : கரோலிசா ,முகமது அஸ்லாம்,கிருஷ்ணா
திரைப்படம் : சில்லென்று ஒரு காதல்
"சில்லென்று ஒரு காதல்" (வரிச்சலுகைக்கென பெயரின் முதல் வரியில் "ஜி", "சி" யானது போலும்!) இசை கேட்டபிறகு எனது செல்லிடப்பாடுவானில் அடிக்கடி ஒலிக்கும் பாடலாய் இருக்கிறது "மாரீசம் யாதோ.." முழுக்க ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ் தமிழ் தோய்ந்த மேற்க்கத்திய இசை பாணியில் நெய்யப்பட்ட மிக நல்ல பாடல்.
மாரீசம் யாதோ , இந்த மாதோ
காதல் தீதோ, சூதோ, வாதோ
இணையாதோ, உடையாதோ
இந்த முதல் மூன்று வரிகள் முதல் மூன்று நிமிடங்களுக்கு நிறைய இசைகோர்வைகளுக்கு நடுவில் மூன்று தடவை தொடர்ந்து "கரோலிசா" வால் பாடப்படுகிறது. மிக வேகமாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சட்டென்று விழும் சன்னமான மெளனத்தில், மிக மெல்ல ஒலியில் கெளதம்,கெளதம்... என்று கரோலிசாவின் குரல் வந்து விழ தொடர்கிறது, முகமது அஸ்லாம் குரல்
யார் இது, உன் பூர்வம் எது
என்ன தீ இது
புகை மூடி நின்றது
என் யாக்கை உயிர்
வெளி நின்றதோ!
மின்னல் ஒராயிரம்
உயிர் கொண்டதோ!
தேஜோபயம்
மெல்லிய இசை கடந்து போக, தேஜோபயம், ஜென்மாந்திரம், சாகுந்தலா, ப்ரேமாஸ்திரம், என்ற வார்த்தைகள் ஆண் மற்றும் பெண் குரலில் ஒலிக்க மெல்ல ஓய்ந்து மெல்லிய தாள கதிக்கு வந்து நிறைவடைகிறது பாடல்.
மிக அழகான இந்த பாடலை திரையில் காண பெரும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பின்குறிப்பு:
மிக நல்ல இசைவட்டில் மட்டும் கேட்கவும்.
சுட்டிகள்:
http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.8567/



2 Comments:
I guess i am hearing something different
ச்like this
மாரீசம் யாதோ? (mArIcam 01 1. hypocrisy, dissimulation; 2. swoon)
இன்னும் ஆதோ?
காதல் தீதோ?
சூதும் வாதும் கிடையாதோ?
தனியாதோ (பணியாதோ??)?
யார் இது, உன் பூர்வம் எது?
என்ன தீ இது?
புகை மூடி நின்றது
என் யாக்கை உயிர்
வெளி நின்றதோ?
மின்னல் ஓராயிரம்
ஓளி கொண்டதோ?
தேஜோமயம
வருகைக்கு நன்றி பாஸ்கர்.
ச்தமிழ் வார்த்தைகளை கஷ்டப்பட்டு தேட வேண்டியிருக்கிறது பாருங்கள்.
மீண்டும் ஒருமுறை கேட்டு பிழையிருந்தால் கண்டிப்பாக சரி செய்கிறேன். நன்றி.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home