சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
மொழி : தமிழ்
நடிப்பு : ரவி,த்ரிஷா,பிரபு,பாக்யராஜ்,கீதா,ரிச்சா,தேஜாஸ்ரீ,சந்தானம்,
நடிப்பு : ரவி,த்ரிஷா,பிரபு,பாக்யராஜ்,கீதா,ரிச்சா,தேஜாஸ்ரீ,சந்தானம்,
மணிவண்ணன்,ஹனீபா,சச்சு,மல்லிகா,கலாபவன் மணி......(இன்னும் நிறைய பேர்)
இசை : தேவிஸ்ரீ பிரசாத்
இயக்கம் : M.ராஜா
இசை : தேவிஸ்ரீ பிரசாத்
இயக்கம் : M.ராஜா
ஜெயம்,M.குமரன் s/o மஹாலக்ஷ்மி திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் ராஜாவின் மூன்றாவது திரைப்படம்.தெலுகுவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் (Nuvvostanante Nenoddantana) மாற்று மொழி வடிவம். முதல் வாரமே தியேட்டரில் சென்று பார்க்கும் திரைப்படங்களுக்கென சில இலக்கணங்கள் வைத்திருக்கிறேன். அவற்றின் எந்த எல்லைக்குள்ளும் இந்த திரைப்படம் வரவில்லை எனினும் பெரிதும் ஏமாற்றவில்லை என்பது எனக்கு நல்ல செய்தியே.
கதை
பாசமான தங்கை பணக்கார NRI வாலிபனை காதலிக்க, பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன், காதலியின் அண்ணனின் condition களை நிவர்த்தி செய்து காதலியை கைபிடிக்கும் கதை. கதை கொஞ்சம் பழசானாலும் condition மட்டும் புதுசு. UK return ரவி வயற்காட்டில் விவசாயம் செய்து அண்ணனைவிட அதிக கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான்.
கதாபாத்திரங்கள்
நாயகன் ரவி. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்ல ஆசையாகதான் இருக்கிறது.(அவருக்கு இனிமேல் make-up போடாமல் இருந்தால் நன்றாக இருக்குமோ? சில இடங்களில் அளவுக்கு அதிகமாக முகத்தில் பவுடர் பூச்சு தெரிகிறது.) ஆனால் நாயகி திரிஷாவை விட நன்றாகவே நடித்திருக்கிறார்.
சந்திரமுகிக்கு பிறகு பிரபுவிற்கு மீண்டும் குணசித்திர வேடம். அண்ணன் கதாபாத்திரத்தில் திறம்பட செய்திருக்கிறார். நிறைய இடங்களில் சிவாஜியின் மேனரிசம் தெரிகிறது.
ரவியின் பெற்றோராக வரும் கீதா-பாக்யராஜின் கதாபாத்திரங்கள் செய்வதற்கு நிறைய இருந்தபோதும் அவர்களை அளவோடு நிறுத்திவிட்டது ஏன் என்று தெரியவில்லை. அதுவும் கீதாவை இடைவேளைக்கு பிறகு காணவே காணோம்.
இவர்கள் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் அவ்வப்போது ஒரு 15 நொடி புகழ் கொடுத்து அவர்களை திரையின் ஒரமாய் சமர்த்தாய் நிறுத்தி வைத்திருக்கிறார் இயக்குனர்.
(கலாபவன் மணி போன்ற ஒரு நல்ல நடிகருக்கு அடியாள் வேடம் கொடுத்து அவரது திறமைக்கு அணை போட்டிருப்பது சற்றே வருத்தம் தரதக்க செய்திகளில் ஒன்று)
காட்சி ஓட்டம்
முதற்பாதி முழுவதுமே ஜனரஞ்சகமாக சில நல்ல "தரமான நகைச்சுவை" ( காட்சிகளோடுதான் நகர்கிறது. இரண்டாவது பாதிதான் சற்றே அதிகமான தெலுகு வாடையுடன் + 80-90 களில் வெளியான தாலி + அரிவாள் + சென்டிமென்ட் காட்சிகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.
படம் முழுதும் தொய்வில்லாமல் முழு உத்வேகத்துடன் இழைக்கப்பட்டுள்ளது தேவிஸ்ரீபிரசாதின் இசை. நல்ல தாளகதியில் அமைந்த பாடல்கள் , குறையில்லாத பின்னணி இசை என தனது ராஜாங்கத்தை நடத்தியிருக்கிறார். (கபிலனின் வரிகளில் "உன் பார்வையில்" பாடல் என்னுடைய ஆதர்சம்.)
Special Effects காட்சிகளை தேவைப்பட்ட இடங்களில் புகுத்த முயற்சி செய்திருக்கிறார். பெரும்பாலான இடங்களில் நன்றாக வந்திருக்கிறது.
லண்டன் என்று சொல்லி துபாயை காட்டுவது எல்லாம் அவர்களுக்கே நியாயமாக இருந்தால் சரி
சிறப்பம்சங்கள்
1. இசை
2. பிரபு
3. முதற்பாதி
குறைபாடுகள்
1. பின்பாதி
2. உபயோகப்படுத்தப்படாத ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்
சுட்டிகள்
நல்ல பொழுதுபோக்கு படம் மட்டுமே!



5 Comments:
சிவா,
ச்இது எல்லாம் ஒரு படமா? கேவலமா இருக்குங்க. ஜனரஞ்சகமான நகைச்சுவையா எங்கப்பாத்திங்க நீங்க பெரும்பாலானவை 3rd rated jokes.
ஆமாம். எல்லாம் 3rd rated jokes.
ச்சந்தோஷ், ஆராதனா வருகைக்கு நன்றி. நான் ரொம்ப வெறுத்துப்போய்தான் தரமான நகைச்சுவை என்பதை highlight செய்திருக்கிறேன். அதற்கான சுட்டியில் போய் பார்த்தால் உங்களுக்கு புரியும்.
ச்நன்றி.
Such a horrible movie, forced myself to see that nonsense since I was sooper vetti that time. I just dunno how was this a super hit in Telugu and how did one ever felt like remaking it in Tamil. Incase this movie becomes a hit in Tamil, then, God...............please save Tamil makkal.
ச்"அவருக்கு இனிமேல் make-up போடாமல் இருந்தால் நன்றாக இருக்குமோ? சில இடங்களில் அளவுக்கு அதிகமாக முகத்தில் பவுடர் பூச்சு தெரிகிறது.) ஆனால் நாயகி திரிஷாவை விட நன்றாகவே நடித்திருக்கிறார்."
ச்நாயகி திரிஷாவை விட என்று நீங்க சொல்லி ரவியை நீங்க இந்த அளவுக்கு அவமான
படுத்தி இருக்கவேண்டாம், இளம் புயல்....அது இது என்று டைட்டில் போடும் நாயகனை
போய்...இப்படி திரிஷாவோட Compare செய்துவிட்டிங்களே சிவா.....
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home