$

Monday, July 31, 2006

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

மொழி : தமிழ்
நடிகர்கள் : பரத்,மல்லிகா கபூர், அருண்குமார்,தீபு,பாஸ்கர்,ரேணுகா.
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் : விஜய் மில்டன்
Special Effects : EFX , Media Artists




"கொலுசுகள் பேசக்கூடும்" என்ற மிக பிரசித்தி பெற்ற (உரைநடை) கவிதை புத்தகத்தின் ஆசிரியர் என்ற முறையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் "விஜய் மில்டன்" -ன் விசிறி நான். அவரது முதல் திரைப்படம் காண வெகு நாள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

கதை

தன்னை காதலிக்காத காதலியை அவள் காதலிக்கும் காதலனுடன் சேர்த்து வைக்கும் அந்த கால ஹீரோ கதை என்று ஒற்றை வாக்கியத்தில் சொல்லி விட முடியாதபடி மிக நேர்த்தியான காட்சிகளையும், சம்பவங்களையும் கோர்த்து கத்தி ரத்த சத்த பயமில்லாமல் அழகான திரைப்படமாக செதுக்கியிருக்கிறார்.

தன் காதலியை தேடி சென்னை வரும் மனோ (பரத்) விற்கு தோழியாகிறாள் ஜோ (மல்லிகா). ஜோவின் காதலனான "ப்ரேம்" (அருண்) தான் மனோவின் காதலி "நந்தினி"(தீபு)யின் மனம் கவர்ந்தவன் என்று அறிந்து இருவரையும் பிரிக்க திட்டமிடுகிறார்கள்.

அவர்களின் திட்டங்கள் எல்லாம் பொய்த்துப்போவது மட்டுமல்லாமல் ப்ரேமுக்கும், நந்தினிக்கும் திருமணம் நிச்சயம் ஆகும் வரை செல்கிறது. மனமுடைந்து போகும் மனோவிற்கும், ஜோவுக்கும் இன்ப அதிர்ச்சியாக, அவர்களே எதிர்பாராத வண்ணம் ப்ரேமும் நந்தினியும் அவர்களின் ego போட்டியில் சண்டையிட்டு பிரிந்துவிடுகிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜோவை ப்ரேமுடன் சேர்த்து வைக்கும் முயற்சிகளை துவக்குகிறான் மனோ.

ப்ரேம் அலுவலகத்தில் வேலைக்காக அணுகும்போது, ஜோ, மனோ ஜோடியினால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பாஸ்கர் மனோவை சந்தேகப்பட, அவரிடம் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறான் மனோ.

தான் தேடி வந்த காதலி நந்தினி அல்ல எனவும், ஜோவே மனோவின் காதலி என்றும் சொல்கிறான். பிறகு மனோவின் காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்.

சிறப்பம்சங்கள்

1. மல்லிகா கபூர் - நிச்சயமாக படத்தின் தலைப்புக்கேற்ற ஹீரோயின் என்பது மிகவும் மகிழ்வான செய்தி. தனது பாத்திரத்தை ( glycerine காட்சிகள் ஒன்றிரண்டு தவிர) மிக நிறைவாக செய்திருக்கிறார். அவருக்கு குரல் கொடுத்திருக்கும் சவீதாவுக்கும் அவரது குரலை சிறப்பாக்கிய பெருமை உண்டு.

2. யுவன் - இந்த திரைப்படம் மட்டுமில்லாமல் இந்த வருட துவக்கத்திலிருந்தே பல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் யுவன். நல்ல பாடல்கள் சில இருக்கின்றன. உருத்தாத பின்னணி இசையும் நிறைவே.

3. Special Effects - படத்தின் இடை இடையே சிறிய சிறிய அனிமேஷன் காட்சிகளை உலவ விட வேண்டும் என்று யோசித்த இயக்குனருக்கு முதலில் ஒரு சபாஷ். ஆனால் அஞ்சல் அலுவலகத்தில் தபால் பிரிப்பதற்கெல்லாம் அனிமேஷன் காட்சிகளை இணைத்திருப்பது
நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை

1. அளவுக்கு மீறியதால் படத்திற்கு பலமாக இருந்திருக்க வேண்டிய அனிமேஷம் காட்சிகள் அலுத்துப்போகும் அளவிற்கு இருக்கின்றன.

2. ரேணுகா கதாபாத்திரம் மிகவும் முற்போக்கான கதாபாத்திரம் என்கிற ரீதியில் அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் sorry, கொஞ்சம் ஓவர்.

3. க்ளைமாக்ஸ்.


சில குறைகள் இருந்தாலும் நிச்சயமாக இந்த வருடத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதில் நிச்சயம் சந்தேகம் இல்லை. பொருளாதார ரீதியில் படம் தோல்வியாக இருந்தாலும் நல்ல படம் என்ற முத்திரை இருப்பதால் கண்டிப்பாக அடுத்த படத்தில்
விஜய் மில்டன் ஜெயிப்பார் என வாழ்த்துவோம்


6 Comments:

At 31 July, 2006, Blogger Desperado said...

//ஜோவின் காதலனான "ப்ரேம்" (அருண்) தான் மனோவின் காதலி "நந்தினி"(தீபு) என்று அறிந்து இருவரையும் பிரிக்க திட்டமிடுகிறார்கள்//

புரியவில்லையே. எதோ மிஸ் ஆனா மாதிரி இருக்கே.

ச்  
At 31 July, 2006, Blogger சிவராமன் கணேசன் said...

மிக்க நன்றி desperado. இரண்டு வார்த்தைகள்
நடுவில் விட்டுப்போயிருக்கின்றன.திருத்தியிருக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

ச்  
At 01 August, 2006, Blogger தம்பி said...

சேரன் தயாரிப்பு, விஜய் மில்டன், யுவன், பரத், இவங்க எல்லாம் கூட்டு சேரும்போது கண்டிப்பா படம் நல்லா இருக்கும்னு நினைச்சேன். கடைசில என் கணிப்புல ஒரு லோடு மண்.

சில சீனுக்காகவும், சில வசனத்துக்காகவும் படம் முழுசையும் ரசிக்க முடியுமா என்ன?. இரண்டாவது பாதில மில்டன் ரொம்பவே குழம்பி போயிட்டாரு. கதாநாயகனோட அம்மா பண்ற அலப்பறை இதெல்லாம் படத்தை ஏண்டா பாத்தோம்னு ஆயிருச்சு.

படத்தில ஒரே ஆறுதல் என்னன்னா நீ என் கூட வாழறத விட அவன் கூட வாழறதுதான் நல்லதுன்னு கடைசி சீன்ல காதலிச்சவன்கிட்டயே சேர்த்து வச்சுட்டு தியாகி பட்டம் வாங்குற ஹீரோவா இல்லாம இருக்கறதுதான்.


அன்புடன்
தம்பி

ச்  
At 02 August, 2006, Blogger சிவராமன் கணேசன் said...

வருகைக்கு நன்றி தம்பி. உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி.

ச்  
At 07 August, 2006, Anonymous Anonymous said...

padamaey theater'a vuttu odi maatham pala aaiduchu.. inuma intha kuppai ku vimarsanam eluthureenga sivaraman

ச்  
At 07 August, 2006, Blogger சிவராமன் கணேசன் said...

வருகைக்கு நன்றி அனானி. அது குப்பை என்று நினைத்துதான் பார்க்காமல் விட்டிருந்தேன்.சில குறைபாடுகளோடு கூடிய நன்றாக வந்திருக்க வேண்டிய படம் என்று தோன்றியதால்தான் எனது கருத்தை பதிவு செய்தேன்.

ச்  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ??????????.??????????...??????-??---    
????????????????????????, ????????????????????????????????

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal