$

Thursday, June 22, 2006

My date with the president's daughter



மிகுந்த மனசோர்வு தரும் நாட்களில் ஐகாரஸ்பிரகாஷ் போலவே நானும் நகைச்சுவை திரைப்படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அவ்விதம் நேற்று பார்த்த திரைப்படம் My date with the president's daughter. லாஜிக் பற்றியெல்லாம் யோசிக்காமல் மனம் விட்டு சிரித்தால் 100% மகிழ்ச்சி நிச்சயம்.

"டக்ளஸ்" என்கிற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த , நண்பர்களால் அடிக்கடி கேலி செய்யப்படுகிற "dating" ற்காக ஒரு நல்ல பெண் தேடிக்கொண்டிருக்கிற வாலிபன். சம்பிரதாய

முதற்குடிமகனுக்கான அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகள் தாண்டி வெளியில் வர நினைக்கிற அமெரிக்க அதிபரின் மகள் "ஹேலி". இவர்கள் விபத்தாக ஒரு கணத்தில் சந்தித்து தங்களின் date ஆசையை பூர்த்தி செய்ய முடிவு செய்கின்றனர். வழக்கமான ஆரம்பகட்ட தயக்கங்களுக்கு பிறகு தக்க பாதுகாப்புடன் தனது மகளை அனுப்பி வைக்கிறார் அமெரிக்க அதிபர்.

ஆனால் கூடவே வந்து தொல்லை கொடுக்கும் பாதுகாவலர்களின் பிடியிலிருந்து
தப்பி ஓடி பல்வேறு சிக்கல்களை சந்தித்து எப்படி தங்களது முதல் dating
அனுபவத்தை வெற்றிகரமாக்குகின்றனர் என்பதை மிகவும் நகைச்சுவையாக
90 நிமிட திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.

"டக்ளஸ்ஸின் தங்கையாக வரும் அந்த சிறுமி அவ்வப்போது உதிர்த்து விட்டுப்போகும்
நகைச்சுவை வசனங்கள், ஹேலியும், டக்ளஸ்ஸும் தப்பியோடும் chasing காட்சிகள்,
சிறிய சிறிய உத்திகளாலேயே ஹேலியைக் டக்ளஸ் கவரும் இடங்கள் என
நிறைய நகைச்சுவை அம்சங்களைக் கொண்ட திரைப்படமாக இருந்தது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாருங்கள்.


imdb link

amazon link

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ??????????.??????????...??????-??---    
????????????????????????, ????????????????????????????????

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal